கொவிட் தொற்றின் 2 வது அலை கேரளாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
கடந்த மாதம், வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் பாதிப்பும் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நாளை முழு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதனால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படுவது டன் பொதுப் போக்குவரத்து செயற்பாடுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



