யாழில் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

0

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ் கிளையில் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரை சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவரும்

மானிப்பாயை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரும், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 227 ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply