களனி ஈரிய வெட்டிய பிரதேசத்தில் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான கொகேய்னுடன் போதைப்பொருள், விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய மகிழுந்து ஒன்றில் ஆசனத்தில் தலை வைக்கும் பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53கிராம் 510 மில்லி கிராம் கொகேய்ன் போதைப்பொருளே இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது .
குறித்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாயை விட அதிக பெறுமதியான ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துபாயிலிருந்து நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்று துபாயில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவர் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவலை கண்டறிவதற்கு காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மற்றும் மீட்கப்பட்ட போதைப் பொருளுடன் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



