பேருந்து ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

0

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணத்தினால் வருமானம் இன்றி தவிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய அடுத்த வாரம் முதல் வருமானங்களை இழந்து தவிக்கும் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குறித்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயத்திற்கு தேவையான அனைத்து இறுதிகட்ட நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply