கொவிட் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைதிட்டம்!

0

நாட்டில் தற்பொழுது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைதிட்டம் தொடர்பான கோவை சுகாதார அமைச்சினால் வெளியிடப்படுள்ளது.

இதற்கமைய கொவிட் நோய் அறிகுறிகள் அற்ற அல்லது சிறியளவிலான நோய் அறிகுறிகள் உள்ள நோயாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் இரண்டு வயது தொடக்கம் 65 வயது வரையான அனைவருக்கும் குறித்த நடைமுறை ஏற்புடையதாகும்.

மற்றும் இரத்த அழுத்தம், இருதயநோய்,நீரிழிவு முதலான தொற்றா நோய்கள் அற்றவர்களே இவ்வாறு வீட்டில் வைத்து பராமரிக்க படுவார்கள்..

மேலும் வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் தம்மை இந்த முறையில் தனிமைப் படுத்திக் கொண்டு , உரிய சுகாதார வழிமுறைகளை பேணுவதன் மூலம் விரைவில் குணமடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply