தற்போது நாட்டில் விதிக்கப்படுள்ள பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு தரப்பினர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்கள் வினியோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணிக்கு செல்ல எந்தவிதமான இடையூறும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை விட காவல்துறையினர், கிராம சேவையாளர்கள், அத்தியாவசிய பணிக்குழாமினர் உள்ளடங்கலாக உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் குறித்த வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரையறுக்கப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காக வங்கிகளிள் திறக்கப்படுவதோடு இணையம் ஊடான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையினை ஊக்குவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மின்சாரம் நீர் எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட சேவைகளையும் தொடர்ச்சிசியாக முன்னெடுக்க முடியும்.
மேலும் நிர்மாணப் பணிகளில் நாளாந்த வேதனம் பெறும் பணியாளர்கள் சேவையில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



