மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிப்பவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை!

0

நாட்டில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிப்பவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய இவர்கள் பயணிக்கும் வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிலர் மாகாண எல்லைகள் வரையில் பேருந்துகளில் பயணித்து பின்னர் அங்கிருந்து நடையாக சென்று வேறு பேருந்துகள் மூலம் சில இடங்களில் சிலர் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் புதிய பேருந்து உரிமையாளர், சாரதி, நடத்துனர், சம்பந்தப்பட்டவர்களுடன் குறித்த பேருந்தையும் காவல்துறையினர் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply