மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்!

0

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவர் சுவாச கோளாறு காரணமாக தமிழகத்தில் மதுரை அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் காலமானார்.

இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

இதற்கமைய மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சுவாச கோளாறு காரணமாக அதை எழுதி இருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் மதுரை ஆதீனத்தின் 292 வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply