வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஒத்தி வைப்பு!

0

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2 ஆயிரத்து 22 ஆண்டு மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடாத்துவது தொடர்பாக தர்ம கர்த்தா சபை, ஆலய நிர்வாகம், திருவிழா உபய காரர்களுடன் ஆலய வளாகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆலய தற்காலிக தர்மகர்த்தா சு.குலசேகரம் தலமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் பதினைந்து திருவிழா உபயதாரர்கள் உட்பட இருபது பேர்வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply