தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமிக்ஞை பிரிவின் தலைவர் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமையகளுவாஞ்சிகுடி காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வெளி நாட்டில் உற்பத்தி செய்யப்பட கைக்குண்டு ஒன்று கையகப்படுத்தப்படுள்ளது
மேலும் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆரம்பகட்ட விசாரணையின் போது இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமிக்ஞை பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
,மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



