நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் மிகவும் வலுப் பெற்று வருகின்றது.
இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் உட் பிரவேசிக்க மற்றும் வெளியேற முயன்ற 364 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சாலை தடுப்பு களிலிருந்து 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு வாகனங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டுகளை மீறிய குற்றசாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதி மன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



