விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் பிரச்சினை தீரும்

0


விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகள், துன்பங்கள் தீரும். இப்போது எந்த அர்ச்சனை என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.


கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள், லக்னத்தில் கேது இருப்பவர்கள், 2,4,6,8,12 ஆகிய இடங்களில் சுய ஜாதகத்தில் கேது இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறையத் தடைகளைச் சந்திக்க நேரிடும். அவர்கள் விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.


விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி அர்ச்சனை செய்தால், அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். வில்வ இலை அர்ச்சனை செய்தால் துன்பங்கள் தூளாகும். மருத இலையால் அர்ச்சனை செய்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.


தேவதாரு இலையால் அர்ச்சனை செய்தால் மன வலிமை கிடைக்கும். வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் வளர்ச்சி கூடும். மரிக்கொழுந்து இலையாலும், பச்சை இலையாலும் அர்ச்சனை செய்தால் ஞானமும், கல்வியும் விருத்திக்கும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply