சென்னையில் தீவிரம் பெற்று வரும் கொரோனா -மூடப்பட சில கடைகள்!

0

தற்போது சென்னையில் கொவிட் தொற்று தீவிரம் பெற்று வருவதை தடுக்கும் நோக்கில் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற கடைகளைப் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று முன்தினம் முதல் ரங்கநாதன் தெரு, என்.எஸ்.சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் போன்ற முக்கிய இடங்களில் செயற்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் அந்தப் பகுதியில் செயற்பட்ட டாஸ்மாக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவ்வாறு பாரிமுனையிலுள்ள மிண்ட் தெரு, திருவல்லிக்கேணி , பாரதி சாலை, அமைந்தகரை, போன்ற பகுதிகளில் செயற்பட்டு வந்த நான்கு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளது.

அதேபோன்று மேற்கு தாம்பரத்தில் செய்யப்பட்ட மூன்று மதுக்கடைகளையும் மூடுவதற்கு அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடைகளில் விற்க இந்த மது பானங்கள் அனைத்தும் அருகில் இருந்த கடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் 40 எலைட் மதுபானக் கடைகள் மால்களில் செயற்பட்டு வந்தன.

கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கையால் இந்த மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply