கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு போராட்டம்!

0

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொத்தலாவல சட்ட மூலத்தின் மூலம் நாட்டில் உள்ள இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுபூராகவும் பொது அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply