இன்று முதல் மேல் மாகாணத்தில் விசேட கண்காணிப்பு.

0

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

அத்துடன் மேல்மாகாணங்களில் சன நெரிசல்கள் அதிகமாக காணப்படும் நகரங்களில் பொது மக்கள் கூடுதலானோர் முகக்கவசம் இன்றி பயணம் செய்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலே இந்த விடயம் தொடர்பில் மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட கண்காணிப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,154 ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply