சபரிமலை கோவில் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படவுள்ளது.

0

சபரிமலை கோவில் எதிர்வரும் 16 ம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் கொவிட் பரிசோதனை செய்யப்பட் நெகட்டிவ் சாற்றுதல் அவசியம் கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக சபரிமலை கோவில் நிர்வாகம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகின்ற 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்தும் 21ஆம் திகதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்

பின்னர் மாலை 5 மணிக்கு நடை மீண்டு திறக்கப்பட்டுஆறு மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு எட்டு முப்பது மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மேலும் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாள் தோறும் 5,000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்துக்கு வரும் 17 ஆம் திகதிக்கு முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு வருகை தருபவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றுகளையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply