உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்துவது தொடர்பில் ஒவ்வொரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய இந்தப் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது உலக நாடுகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா அவசரகால திட்டத்தின் தலைவர் மைக்ரியான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் வாரம் தோறும் மில்லியன் கணக்கான கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
அதேபோன்று ஐரோப்பாவிலும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்களும் பதிவாகின்றனர்.
ஆகவே உலக நாடுகள் அனைத்தும் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் உலக நாடுகள் அவசரப்படக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.



