கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளான பாரவூர்த்தி-இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

0

வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்த்தி ஒன்றே புளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டு இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வாகனத்தின் சாரதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் மற்றுமொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply