மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்காவினால் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மனித கடத்தல் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பாக சிறுவர் மையங்களில் இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிகாப்பிடப்பட்டுள்ளது
மேலும் இவ்வாறான விடயம் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அறிவித்துள்ளது.



