உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

இதன்படி கேகாலை அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகளே உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி

அதேபோன்று கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யா கிராமம்

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரி பிரிவின் மருதமுனை மூன்று கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காலி மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருநாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பனஇன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply