நல்லது நடக்க வேண்டுமா? கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை..!

0

அதிகாலையில் கண்விழித்தவுடன் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல சொற்களைப் பேச வேண்டும். நல்ல தெய்வீகப் படங்களில் கண் விழிக்க வேண்டும். குறிப்பாக கண் விழித்ததும் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.

அதன்பிறகு உள்ளங்கையைப் பார்த்து தாய், தந்தை, பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியாக விளங்குபவர்களை நினைத்து வணங்க வேண்டும். இந்த மானசீகமான ஆசியால் நமக்கு அன்றாடச் சூழ்நிலைகள் அனைத்தும் நன்றாக அமையும்.

குளித்து முடித்த பிறகு இறைவனை பூஜித்து விட்டு குடும்பப் பெரியவர்கள், உடன் இருப்பவர்கள் மனம் கோணாமல் பேசி அன்றைய அலுவல்களைத் தொடங்கினால் நாள் முழுவதும் நல்லதே நடக்கும்- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply