எதிர்மறை சக்திகள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீராமர் ஸ்லோகம்

0

ஸ்ரீ ராமரின் புகழ் பாடும் இந்த மூல மந்திரத்தை தினமும் ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்
ராமர்
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ

“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மூல மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மற்றும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். உங்களை பீடித்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply