உங்கள் குடும்பத்துக்கு அடிக்கடி சிக்கல், தடங்கல் ஏற்படுகிறதா..? வீட்டில் இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்

0

தாய்க்கு குழந்தை என்பது அவன்/அவள் சிறு வயது முதல் திருமணம் ஆகும் வரை குழந்தைதான். ஆகையால் ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு நிலையில் குழந்தைகளுடைய வாழ்க்கையில் நன்மை, தீமையை தீர்மானிக்கிறது.

குழந்தைகளுக்கு படிப்பு தடைபடுதல் அல்லது பாதிப்படைதல் போன்று ஒரு வீட்டில் இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் வடகிழக்கு, வடக்கும், கிழக்கும் பாதிக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக வடகிழக்கில் படிக்கட்டு அல்லது கழிவறை போன்று ஏதேனும் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு படிப்பு முற்றிலும் பாதிக்கும். அதேபோல் குழந்தைகளுக்கு எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

அதேபோல் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் வயது வந்த பிறகு வேலை கிடைக்காமல் இருப்பது அல்லது நிரந்தர வேலை அமையாமல் இருப்பது மற்றும் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாவது போன்ற விஷயங்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் வடகிழக்கிலும், வடமேற்கிலும் ஏதோ ஒரு தவறு நிச்சயம் இருக்கும்.

அடுத்ததாக நல்ல வேலை கிடைத்து பிறகு திருமணம் என்று வரும்போது திருமணத் தடை அல்லது காதல் விவகாரங்களில் மாட்டிக்கொள்வது. ஏதேனும் சூழ்நிலை காரணத்தால் அந்த வீட்டில் வடமேற்கு திசையும், கிழக்கு திசையும் பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு வீட்டில் வடமேற்கு அறையில் குழந்தைகள் உறங்குவது மற்றும் தென்கிழக்கில் படுத்து உறங்குவது போன்று ஏதேனும் இருப்பின் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இப்படி ஒவ்வொரு கட்டங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோன்று ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு குழந்தைகளையும் பாதிக்கும். வீட்டில் ஏற்படும் சிறு சிறு வாஸ்து குறைபாடுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு சரி செய்து குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குங்கள்.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply