பூஜையறையில் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள்!

0

நமது குலதெய்வம், இஷ்ட தெய்வம் என்று நிறைய தெய்வங்கள் இருக்கலாம். ஆனால், பூஜையறை வைக்க வேண்டிய கடவுளின் படங்கள், பூஜையறையின் அமைப்புகள் என்று சில விஷயங்கள் இருக்கின்றன. எப்படி கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் முகத்தில் அதற்கான சரியான இடத்தில், சரியான அளவில் இருக்கிறதோ அப்படி நம் வீட்டிலும் பூஜையறையின் அமைப்பும் சரியான அளவில் இருந்தால் தான் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைத்து, குடும்பத்தில் மனநிம்மதியும் ஏற்படுகிறது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செந்தூர் அல்லது பழனி முருகன், திருப்பதி வெங்கடாசலபதி, உறங்கா அரங்கனையே ஆண்ட ஆண்டாள், சமயபுரம் மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சியம்மன் மற்றும் அவரவர் குல தெய்வங்களின் படங்களை பூஜையறையில் வைக்கலாம். இந்த திருவுருவங்களைத் தாங்கிய படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். அன்னபூரணி சிலை இருந்தால் தினமும் அரிசி மாற்ற வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு மேல் பூஜைக்கு நேரம் ஒதுக்குவது கூடாது.

கோமதி சக்கரமும், தாமரை மணியும் செல்வத்தை ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றை பூஜையறையில் வைத்து பயன்படுத்தலாம். இது தவிர, சாளகிராம கற்களை வழிபட்டு வருவதும் நல்ல பலன்களைத் தரும். வேல் வழிபாடும் மிகச்சிறப்பான பலன்களை நல்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வீட்டின் ஆற்றல் களமான பூஜையறை, வீட்டில் இருக்கவே கூடாத இடம் தென்மேற்கு மூலை (பழனி மூலை), வடகிழக்கு மூலை (ஈசானிய மூலை) மற்றும் பிரம்மஸ்தானம் ஆகும். வடமேற்கிலும், தென்கிழக்கிலும் பூஜையறையினை அமைத்துக் கொள்ளலாம். அதிலும் தென்கிழக்கு மூலை அதி அற்புதமான பலன்களை வழங்கும். இம்மூலையில் பூஜையறை அமைப்பவர்கள் சைவமாக இருப்பது சிறப்பானது.- Source: toptamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply