
? பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது.
? துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும். . இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. பூஜைக்கு சிறந்தவை.
? இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

? சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வ இலை, அம்பிகைக்கு உகந்த இலை வேப்பிலை, பெருமாளுக்கு உகந்தது துளசி, விநாயகருக்கு உகந்தது அருகம்புல், பிரம்மனுக்கு உகந்தது அத்தி இலை.
? தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்: பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.- Source: kalakcinnima
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
