பொருளாதார நிலையை உயர்த்தும் கணபதி மூல மந்திரம்

0

புதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள் கணபதியை வழிபட்ட பிறகு தொடங்கும் அக்காரியங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது அனுபவ உண்மை. அதிலும் வல்லமைகள் அனைத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஓம் ஹும் க்லௌம் ஹரித்ரா கணபதயே

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம்
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

கணேசன் எனப்படும் ஹரித்ரா கணபதியை போற்றி இயற்றப்பட்ட இந்த மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம். சிறப்பான இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்த பின்பு விநாயகரின் படத்திற்கு முன்பு நின்று, விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை மனமொன்றி துதிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நீங்கள் புதிதாக தொடங்கும் ஜன வசியம் ஏற்பட்டு நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களும் தடை, தாமதங்களின்றி சுலபமாக வெற்றியடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply