
? ஸ்ரீராமஜெயம் என்று தினமும் எழுதினால், நாம் நினைக்கும் காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நமக்குத் தெரியும்.
? முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியது யார் தெரியுமா? ராம ராவண யுத்தம் முடிந்து, இராவணனை வதம் செய்து முடித்த உடனே தன்னுடைய வெற்றியின் நற்செய்தியை சீதாதேவிக்கு தெரிவிக்க வேண்டும் என்று எல்லோரும் ஆவல் கொண்டனர் .
? சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் இந்த நற்செய்தியை தெரிவிக்க தகுதியானவர் என்று ஸ்ரீராமர் நினைத்தார்.
? ராமபிரான் ஆஞ்சநேயரை அனுப்பினார். அனுமானும் அன்னை சீதா தேவியை தரிசிக்க சென்றார்.

அன்னையை தரிசிக்கும் சமயத்தில் ஆஞ்சநேயரின் கண்களில் நீர் பெருகி (ஆனந்தக் கண்ணீருடன்) நின்றார். ஆஞ்சநேயருக்கு பேச நா எழவில்லை.
? எனவே ஸ்ரீராமனின் வெற்றியினை
ஸ்ரீராமஜெயம் என எழுதிக் காட்டினார். அதைப்பார்த்து சீதாதேவியும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
இப்படி முறைப்படி முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதிய பெருமை அனுமானுக்கே உரித்தானது. நாமும் ஸ்ரீராமஜெயம் எழுதி, நல்வாழ்க்கையை பெறலாம்.- Source: kalakcinima
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
