
செல்வ வளம் பெருக அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
செல்வ வளம் பெருக…
மகாலட்சுமி
செல்வ வளம் பெருக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
பணத்தை வாங்கும் பொழுது, வலது கையால் வாங்க வேண்டும்.
காசுகளைத் தூக்கி எறியக்கூடாது.
வாசல்படியில் கொடுக்கல் – வாங்கல்களை வைத்துக் கொள்ளாதீர்கள்.
பிறரிடம் இருந்து பணம் பெறும்போது, எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

பணப்பெட்டி வைக்குமிடம், மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். எனவே அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் லட்சுமி இருப்பாள். எனவே எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள்.
வீட்டின் தென்மேற்கு மூலையில் வடக்கு நோக்கி பணப்பெட்டியுள்ள அலமாரியை வைத்துக்கொள்வது உகந்தது.
உலோகப் பெட்டிகளில் பணம் வைப்பதை விட மரப்பெட்டிகளிலோ அல்லது மஞ்சள் வண்ணத் துணிப்பைகளிலோ வைத்துக் கொண்டால் வளர்ச்சி கூடும்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
