பாவத்தை குறைக்கும் சித்ரகுப்தன் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

0

பூலோகவாசிகளின் புண்ணிய, பாவ கணக்குகளை எமதர்மனிடம் எடுத்துரைத்து, அதற்குரிய தண்டனையை வாங்கித் தருவது சித்ரகுப்தனின் வேலை. ஒரு சமயம் கலியுகத்தில் பாவங்கள் அதிகமாகியது. அதை கணக்கெடுத்து சொல்லி, சொல்லியே வெறுப்படைந்த சித்ரகுப்தனுக்கு, தலையில் வெப்பம் அதிகரித்தது. அதனை தணிக்க பிரம்மனிடம் சென்று ஆலோசனை கேட்டார் சித்ரகுப்தன்.

பிரம்மதேவனோ, “திருப்பாற்கடலில் உள்ள அத்தி ரங்கனுக்கு, அத்தி சமித்துக்களால் ஹோமம் செய்து, அத்தி தைலத்தை நெற்றியில் தடவிகொள். அத்தி ரங்கனின் அருளால் உன்னுடைய நோய் குணமாகும்” என்று கூறினாராம். அதன்படியே செய்த சித்ரகுப்தனுக்கு நோய் நீங்கியது. எனவே திருப்பாற்கடலில் உள்ள அத்திரங்கநாத பெருமாளை வழிபடுபவர்களுக்கு, சித்ரகுப்தன் எழுதிவைத்த பாவ கணக்குகள் குறையும் என்பது ஐதீகம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply