
காகம் நம் சமூகத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது. மற்ற பறவைகளை விட காகம் நம் சமூகத்தோடும், வாழ்க்கையோடு ஒட்டி பயணித்துக் கொண்டிருக்கின்றது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைப்பதால், நம் வாழ்வில் தீரா கடன் தொல்லைகள் தீரும். புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும்.காகம் நம் முன்னோர்களின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. அதோடு நம் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் போது முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியோர் கூறுகின்றனர்.

காக்கை சனி பகவானின் வாகனமாகும். காக்கைக்கு உணவளிப்பதால் சனி பகவான் மகிழ்ச்சி கொள்வார். அதோடு சனி பகவானின் சகோதரர் எம தர்ம ராஜன் ஆவார். எம தர்ம ராஜா காக்கை வடிவில் வந்து மனிதர்கள் வாழும் இடங்களில் அவர்களின் நிலையை அறிவாராம்.காக்கை உங்கள் வீட்டை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கை கரைவதை கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் பெறலாம்.காகம் ஊரில் மரங்களை பரப்பும் வேலையை செய்கிறது. வேப்பம் பழம், புளியம் பழம், தக்காளி என பலவற்றை தின்று அதன் கொட்டைகளை பரப்பி பல மரங்கள் புதிதாக வளர்வதில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு.- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
