நாளை ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்

0

ஆடி மாதம் என்றாலே பல்வேறு திருவிழாக்கள் நடக்கும் தெய்வீக மாதமாகும். அதில் ஆடி அமாவாசை எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு மிகச் சிறப்பான நாளாகவும், பிதுர்களை வழிபடக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது.

அமாவாசை என்பது எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மிகச்சிறந்த நாளாகும். கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் வளர்வதாக ஐதீகம். அதனால் தான் இது வளர்பிறை என கூறப்படுகிறது.

சிறப்பான அமாவாசை வகைகள்
அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களௌக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆடி அமாவாசை விரத முறை:
பொதுவாக பெற்றோர் இல்லாதோர் அமாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு உணவு வைத்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து நீர் நிலைகள், ஆறு, கடல் போன்ற இடங்களில் குளித்து, பித்ருக்களை வரவேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறும் வகையில் ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. – Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply