இது இப்படித்தான் நோய்கள் தீர கருடனை தரிசிப்போம்… ஏழு நாளும் ஏழு பலன்கள்..

0

ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாக ஒவ்வோர் வாகனம் உண்டு.திருவிழா காலங்களில் கருட தரிசனம் பார்… என்று சொல்வார்கள்.அதன் அர்த்தமும், பலன்களும் தெரியாமலேயே வானத்தில் வட்டமிடுகிற கருடனைப் பார்த்து, ‘கருடா… கருடா’ என்று கும்பிட்டு வந்தோம்!

கருடன்,ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனம். கருடனுக்கு கொற்றப்புள்,தெய்வப்புள்,வேத ஸ்வரூபன், பட்சிராஜன்,சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி எனப் பலபெயர்கள் உண்டு. கருடனின் அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே கருடனுடைய கண்கள் என்றும், மந்திரங்கள் கருடனுடைய தலை என்றும், சாம வேதமே கருடனின் உடலாகத் திகழ்கிறது என்றும் வேதங்கள் கூறுகின்றன.

கருடனை தரிசிக்கிற நாளின் கிழமைகளுக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கின்றன.
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். மனக்குழப்பம் நீங்கும்,பாவங்கள் தொடராது.

திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.குடும்பம் செழித்தோங்கும்.செவ்வாய்க்கிழமையில் தரிசித்தால், மகிழ்ச்சி அளிக்கும்.மனதிற்குள் தைரியம் அதிகரிக்கும்.

புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் நம்மை விட்டு விலகுவர்.விரோதிகள் அழிவர்,வெற்றி உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நாம் சம்பாதிக்கும் செல்வங்கள் நம்மிடம் தங்க மறுக்கிறதே என்று ஏங்குபவர்கள் வெள்ளிக்கிழமை கருட தரிசனத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் கருட தரிசனம் செய்து வர, அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிலைக்கும். சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் முக்தி பெறலாம் ஞானம் உண்டாகும்.- Source: toptamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply