149 ஆண்டுகளுக்கு பின் இன்று நள்ளிரவு சந்திர கிரகணம்! வெறுங்கண்ணுடன் பார்க்கலாம்

0

இன்று நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறுங்கண்ணுடன் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த சந்திரகிரகணமானது இந்தியாவில் பகுதியளவு மட்டுமே தெரியும் என அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப் அழைக்கப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும்.

அதன்படி இந்தாண்டிற்கான பகுதியளவு சந்திர கிரகணம் ((Partial Lunar Eclipse) ) நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட இரவு முழுவதும் தெரியும். இன்று நள்ளிரவு சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலைக் கடக்கும். புதன்கிழமை அதிகாலை 1.31 மணியளவில் கிரகணம் தொடங்கும். சந்திரன் இருட்டாக இருக்கும் போது மிகப் பெரிய பகுதி கிரகணம் அதிகாலை 3 மணியளவில் இருக்கும் புதன்கிழமை அதிகாலை 4:29 மணி வரை சந்திரன் ஓரளவு கிரகணமாக இருக்கும். புதன்கிழமை அதிகாலை 3:01 மணியளவில், சந்திரனின் விட்டம் 65 சதவீதம் பூமியின் நிழலின் கீழ் இருக்கும். சுமார் 3 மணி நேரம் சந்திரகிரகணம் தெரியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இந்நிகழ்வை இந்தியாவில் எல்லா பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும். பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாகவும் இதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இந்த அழகிய காட்சியை புகைப்படம் எடுக்க விரும்பினால் வைட் – ஆங்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கலாம். அடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2021ம் ஆண்டு தான் நிகழும்.

இந்த சந்திர கிரகணத்தை ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் ஆசியா ஆகிய இடங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.- Source: patrikai


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply