குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று விரதம் இருந்து மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று விரதம் இருந்து பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும்.

தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply