கையில் காப்பு கயிறைக் கட்டிகொள்வதற்கு பின்னால் இப்படியொரு ரகசியமா?

0

அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்பு கயிறு கட்டியிருப்பார்கள். இதில் மஞ்சள், கறுப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் நாம் கயிறு கட்டுவது வழக்கம்.
ஆன்மீக ரீதியாக பார்க்கையில் இந்த கயிறு நம்மை தீய சக்தியின் பிடியில் இருந்து காக்கும் தன்மை கொண்டவை. கயிறு தவிர சிலர் வெள்ளி, செம்பு, தங்கம் என தங்களின் வசதிக்கு ஏற்ப காப்பு செய்து அணிந்துக்கொள்வர். இதுவும் நம்மை காக்கும் ஒரு கவசமாகவே செயல்படுகிறது.

நம் உடலில் பல்வேறு முடிச்சுக்கள் இருக்கின்றன, ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துகின்றன. அந்த வகையில் முக்கிய முடிச்சுப் பகுதியான மணிக்கட்டில் கயிறை கட்டிக்கொள்வது பழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம். இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் அணிவதன் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறலாம். அறிவியல் ரீதியாக பார்க்கையில் இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிவுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நாம் கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெற முடியும். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பானதாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply