இவைகளை செய்தால் பாபாவின் மனதில் இடம்பிடிகலாம்..!

0

மனிதர்களிடம் மகத்தான சக்தி உண்டு. ஆனால் சமயங்களில் அவை வேலை செய்யாமல் போகிவிடும். கவலைகள் இல்லாத மனிதன் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கவலைகளை மனதில் ஏற்றிக்கொள்ளாத மனிதர்களைக் காண்பது.

கடவுளைக் கண்டதும் சில நேரங்களில் கவலைகளை இறக்கி வைப்பவன் பக்குவமான மனத்துடன் அப்படியே இருப்பதில்லை. அடுத்த நொடி கவலைகளைச் சுமந்துகொண்டு திரிகிறான். மனஉறுதி என்றால் என்னவென்று தெரியாத இத்தகைய மனிதர்களைத்தான் அதிகம் சந்திக்கி றோம். இதிலிருந்து விடுபட ஒரே வழிபாபாவின் பாதத்தைப் பற்றுவதுதான்.

மன அமைதி இல்லாத இடம் என்று உலகில் எங்குமே கிடையாது. எத்தகைபாரமாக இருந்தாலும் அவற்றை சுமக்கவே முடியாவிட்டாலும் அதைஎன் மேல் இறக்கிவை. உனக்காக நான் சுமக்கிறேன். உன் பார்வையையும் கவனத்தையும் நம்பிக்கையுடன் என் மீது திருப்பு. நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்லும் பாபாவை குருவாக பெற்றிருக்க என்ன தவம் செய்திருக்கவேண்டும்.

தேரோட்டுபவர்கள் திறமைசாலியாக இருக்கும் போது தேரில் அமர்ந்திருப்பவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதை மகாபாரதத்தில் அர்ஜூனனைக் கண்டு அறிந்துகொள்ளலாம். அது போலத்தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் கைப்பிடித்து வழிக்காட்ட பாபா இருக் கும் போது எந்த வகையிலும் அச்சம் கொள்ள தேவையில்லை. அவரை சரணடைந்தால் அனைத்து சஞ்சலங்களும் விலகிவிடும்.

பாபாவின் உபதேசங்களும். லீலைகளும் நம் மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கி,மனிதனிடம் இருக்கும் அற்ப குணத்தை அழித்து உயர்ந்த நிலையைத்தருகின்றன. ஒருவரிடம் நாம் வேண்டும் பொருள் அவரிடமிருந்து முழு மனதாக பெறும்போது அவரிடமிருந்து குறையத் தொடங்கும். அல்லது அந்தப் பொருளை அவர் குறையாத அட்சயப்பாத்திரமாய் பெற்றிருக்க வேண்டும்.

அதுபோல் பாபாவிடம் நாம் கேட்கும் அனைத்தும் அவரது அருளால் இல்லையென்று சொல்லாமல் நிறைவாகவே கிடைக்கும். எவ்வளவு அள்ளி கொடுத்தாலும் அவரிடமிருந்து எதுவும் குறையப்போவதுமில்லை. எப்போதும் ஆபத்பாந்தவனாக இருந்து ஆனந்தத்தை அளிக்கும் அற்புத மகா னாகவே பக்தர்களுக்கு காட்சி தருகிறார் பக்கிரி பாபா.

ஆனந்தமாக இருப்பவர், ஆனந்தத்தை அள்ளி வழங்குபவர் என்று சாயியைப் பற்றி பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி குறிப்பிடுகிறார். அதனால் தான் ஸ்ரீ சாயி அஷ்டோத்திர நாமாவளியில்
ஆனந்தாய நம..
ஆனந்ததாய நம… என்று குறிப்பிடுகிறோம்.

முதல் நாமாவளி ஆனந்தமாக இருப்பவர், இரண்டாவது நாமாவளி ஆனந்தத்தை அள்ளி வழங்குபவர் என்ற பொருள்படும்.அதிலும்பாபாவின் அருளை சொல்லி புரிய வைக்கமுடியாது. பக்தர்களுக்கு அதைப் பெற்ற அனுபவம் பேரின்பமான அனுபவமாக இருக்கும். இடியாப்ப சிக்கலாக இருந்தாலும் எளிதில் விடுவிக்கும் அற்புதமான குரு பாபா. பாபாவின் மீது அன்பு கொண்டிருக்கும் பக்தர்கள் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டார் கள் என்று சொல்வதை விட அவர்களை தவறு செய்ய பாபாவே விடமாட்டார் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

மனதுக்குள் வசிக்கும் பாபாவின் குரல் துன்பப்படும் வேளையில் கவலைப்படாதே இதுவும் கடந்துபோகும் நான் உடன் இருக்கிறேன் என்று ஒலிப் பதை பாபாவின் பக்தையாக நானும் அனுபவித்திருக்கிறேன்.அதே குரல் தர்மம் மீறிய செயலில் ஈடுபடும் முன்னரே கண்டிப்பு காட்டுவதையும் கண்டு அச்சப்பட்டிருக்கிறேன்.

தகப்பனாய், தாயாய், நண்பனாய் வழிகாட்டும் சிறந்த குருவாக பக்தர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் பாபாவின் மகிமையை எடுத்துசொல்ல வார்த்தைகள் இல்லைஎன்பதுதான் உண்மை. ஆனால்நம்பிக்கை,பொறுமை,அன்பு இருந்தால் போதும் பாபாவின் மனதில் நாம் இடம்பிடிக்க…- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply