லெஸ்பியன் உறவை பெண்கள் அதிகமாக விரும்புவது எதனால்..?

0

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு பால் ஈர்ப்புக்கு ஹார்மோன்கள் தான் காரணம். லெஸ்பியன் ஈர்ப்பு எல்லாக் காலத்திலும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவில் பெண்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உணர்ச்சி பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனக்கு மிகப் பிடித்த பெண்ணைக் கட்டிக் கொள்வதும், முத்தமிடுவதும் இன்று அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களிடம் ஈடுபாடு கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர். 50 சதவீதம் பேர் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் Boise university உளவியல்துறை பேராசிரியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளார்.ஆண்-பெண் உடலுறவில்தானே அதிகபட்ச இன்பம் பெற முடியும். பெண்ணும் பெண்ணும் எப்படி முழுமையான இன்பம் பெற முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பெண்ணும் பெண்ணும் காமுறும்போது அவள் கூடுதல் இன்பத்தை அடைகிறாள். மேலும் தனக்குத் தேவையானவற்றைத் தயக்கம் இன்றிக் கேட்டுப் பெறுகிறாள். ஒருவரைப் பேரின்பம் கொள்ளச் செய்வதில் மற்றவர் ஈடுபாடு காட்டுவதும் லெஸ்பியன் உறவின் பாசிட்டிவ் விஷயங்கள்.

ஆணும் பெண்ணும் உறவு கொள்வதில் ஆண் தனது ஆதிக்க மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறான். பெண்ணை தனது மகிழ்வுக்காகத் தயார்படுத்தி, அதன்பிறகு தான் மட்டுமே பேரின்பம் அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான். தன்னோடு கூடும் பெண் எங்கே இன்பம் அடைகிறாள், எவையெல்லாம் அவளுக்குப் பிடிக்கும் என ஆண் கேட்பதுமில்லை; அவள் சொல்வதுமில்லை.

ஒரு பெண்ணை ஆண் கையாளும்போது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். லெஸ்பியன் உறவில் இரு பெண்களும் மென்மையாக நடந்துகொள்கின்றனர். மேலும் இதில் குழந்தைப் பேறு ஏற்படுவதில்லை. இது போன்ற பாசிட்டிவ் காரணங்கள் பெண்கள் லெஸ்பியன் உறவை விரும்பக் காரணம் ஆகிறது. லெஸ்பியன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பெண்கள் மத்தியில் இது பெரும்பாலும் ரகசியமாக உள்ளது.

திருமணத்துக்குப் பின்னர் ஆண்-பெண் உறவில் முழுமை அடையாதபோது லெஸ்பியன் உறவில் பெண்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புண்டு. லெஸ்பியன் உறவில் பெண்கள் சுதந்திரமாகவும் கூடுதல் இன்பத்தையும் உணர்கின்றனர். தனக்கு பிடித்ததை எல்லாம் லெஸ்பியன் தோழியிடம் கேட்டுப் பெறுகின்றனர். மேலும் வைபரேட்டர் போன்ற செக்ஸ் உபகரணங்களைப் பயன்படுத்தியும் ஒருவரை ஒருவர் இன்பத்தில் திளைக்கச் செய்கின்றனர்.

ஆண் – பெண் உறவில் ஆண் ஆதிக்கம் செலுத்துகிறான். லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையே ஆனாலும் ஆணிடம் இந்த ஆதிக்க மனோநிலை தவறுவதில்லை. மேலும் ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரித்து விடுவோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது. இவற்றை விரும்பாத பெண்களுக்கு லெஸ்பியன் உறவு சாதகமானதாகி விடுகிறது. சிறு வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தாலே வெறுப்பு வரவும் வாய்ப்புண்டு. அந்த வயதில் ஏற்பட்ட மோசமான நிகழ்வால் ஆணுடனான செக்ஸ் உறவே வெறுத்துப் போகலாம்.

சிறு வயதிலேயே பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண் குழந்தைகள் லெஸ்பியன் உறவில் சிக்குகின்றனர். பருவ வயதில் செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், பெண்கள் மட்டுமே இருக்கும் சூழலும் இவர்களிடையே லெஸ்பியன் உறவுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. பெண்ணுக்கு பெண் மீதே ஈர்ப்பு ஏற்படுவதற்கு ஹார்மோன்கள்தான் காரணம். ஏதோ ஒரு சூழலில் பெண்கள் இதுபோன்ற உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம்.

இதனால் ஒரு புறம் பெண்களுக்கு செக்ஸ் இன்பம் கிடைத்தாலும், இது வெளியில் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் மனதில் இருக்கும். லெஸ்பியன் உறவால் குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். இதனால் இவர்களை நம்பி இருக்கும் குழந்தைகளின் வாழ்வும் பாதிக்கப்படும். லெஸ்பியன் உறவுக்கு ஆளான சில பெண்கள் அதிலிருந்து வெளியில் வர விரும்புவார்கள். ஆனால், அவர்களின் பார்ட்னர் விடாமல் தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது.

லெஸ்பியன் உறவில் இருந்து வெளியில் வர விரும்பும் பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையால் தீர்வு காணலாம். பதின் பருவத்தில், படிக்கும் காலத்தில் லெஸ்பியன் உறவில் ஈடுபாடு காட்டும் பெண்களின் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. லெஸ்பியன் உறவில் உள்ளவர்களில் யாருக்காவது பால்வினை நோய்த்தொற்று அல்லது எய்ட்ஸ் இருக்கும் பட்சத்தில் இவை பரவவும் வாய்ப்புள்ளது.

பெண்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். திருமண பந்தத்துக்குள் போகாத லெஸ்பியன் பெண்களாக இருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’. ஆண்-பெண் இணைந்து உருவாக்கும் குடும்ப அமைப்பில் உடமை, அதிகாரம் என சட்டதிட்டங்கள் இறுக்கமான நிலை காணப்படுகிறது.

பாலியல் இன்பத்துக்காக ஓர் ஆணை நம்பும் பெண் முழுமையாக தன்னை ஒப்படைப்பதுடன் அவளது திறமை வளர்ச்சி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்ப அமைப்பில் பெண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றைய குடும்ப அமைப்புகள் விரைவில் உடைவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

பெண்கள் மனமும் சுதந்திரத்துக்காக பல ஆண்டுகாலமாக ஏங்குகிறது. தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது. இதுவும் பாலுறவில் ஒரு வகைதான். இவர்களை வெறுப்பதும், இவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதும் மனிதப்பண்புக்கு எதிரானது. இன்னும் சில ஆண்டுகளில் லெஸ்பியன் இணைகளும் அங்கீகாரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply