மிதுனம், கன்னி ராசிகள் அணிய வேண்டிய ராசிக்கல்லும் அதன் பலன்கள்!

0

பிறந்த ராசிக்கு உரிய கல் மோதிரமாக பயன்படுத்துவதோ அல்லது பிறந்த லக்னாதிபதிக் உரிய கல்லை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ராசிகல் அணிவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

தசா புத்தி நடக்கும் போது அந்த திசைக்குரிய கல் பயன்படுத்துவதும், எந்த கிரகம் நீசமடைந்து உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகள் கூறுவதுண்டு. உங்களின் பிரச்னையின் அடிப்படையில் (உதாரணம்: வேலை கிடைக்கவில்லை, திருமணமாகவில்லை உள்ளிட்டவை) அதற்குரிய நவரத்தின கல் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவம் இருப்பதோடு, ராசி அதிபதியினால் தனித்துவ பண்புகள் மற்றும் ராசி நாதன் அமைந்திருக்கும் இடத்தை பொருத்து அந்த ராசிக்கான பலன்கள் மாறுபடும்.

ராசி நாதன்:
மிதுனம், கன்னி ராசிகளுக்கு ராசி நாதனாக புதன் இருப்பதால் இரண்டு ராசிகளுக்கும் மரகதம் ராசிக்கல்லாக அணியலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

மரகதம் ராசிக்கல் அணிவதன் மூலம் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள்:
புதன் திசை நடப்பவர்கள் மரகத கல் மோதிரத்தை அணியலாம். இதனால் அதிர்ஷ்டமும், தொழில் விருத்தியும் அடையும்.

கற்பனை வளத்தை அதிகரிக்கச் செய்வதோடு, மலட்டுத் தன்மையை போக்கச் செய்யும். நல்ல கல்வியும், பேச்சாற்றல், நினைவாற்றல் பெருக்குவதோடு, தீய சக்திகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்துகிறது.

காதல் உணர்வை தருவதோடு, பில்லி, சூனியங்களிடமிருந்து நம்மை காக்க வல்லது.

சீரான உடல் வளர்ச்சி கொடுப்பதோடு, மரகத கல்லை உற்று நோக்கினாலே மனதிற்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. – Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply