
உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இருப்பது தங்கம் ஆகும். உலகம் முழுவதும் தங்கம் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவில் அது ஒரு அலங்கார பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் தங்கத்தை அதிகம் உபயோகிக்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு உலோகமும் நமக்கு ஒவ்வொரு பயனை வழங்கக்கூடியதாக இருக்கும்.தங்கம் அணிவதால் கிடைக்கும் முக்கிய நன்மை என்னவெனில் அது நமது உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை குறைக்கிறது.
மேலும் உங்களுக்குள் ஆன்மீக தேடலை அதிகரிப்பதுடன் உங்களை எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது. இது மட்டுமின்றி தங்கம் அணிவது உங்கள் குடும்பத்திற்கு செல்வத்தையும், வளத்தையும் கொண்டுவரும். இந்த பதிவில் தங்கத்தை எப்படி அணிந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தங்கத்தின் நன்மைகள்
பல நூற்றாண்டுகளாக தங்கம் என்பது வசதி மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் இது அந்தஸ்து என்பதையும் தாண்டி தங்கத்தில் சில ஆன்மீக சக்திகள் உள்ளது, மேலும் இது மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றை சரியாக அணியும்போது வழங்கக்கூடும். பண்டைய இந்தியா, சீனா மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் தங்கத்தின் புனிதத்துவத்தை நன்கு அறிந்துள்ளார்கள். இது உங்கள் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்டும். மேலும் இது உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கையை அதிகரிக்கும்.
தங்க மோதிரம்

தங்க மோதிரம் அணிவதன் மூலம் நீங்கள் தெய்வீக உணர்வை எளிதில் அடையலாம். உங்களுக்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை செயல்பட தூண்டும் சாவியாக தங்கம் இருக்கிறது. மேலும் இது தீயசக்திகளால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில தடங்கல்களை நீக்கும். சில விதிகளின் அடிப்படையில் தங்கத்தை அணிந்தால் அது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும்
விதி 1 தங்கம் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை எப்படி அணிகிறோம் என்பதை பொறுத்தே அதன் முழுமையான பயனை பெறமுடியும். பெண்கள் எப்பொழுதும் தங்க மோதிரத்தை இடது கையில் அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் அணிய வேண்டும்.
விதி 2
தங்கம் பூமியில் கிடைக்கும் மிகவும் அபூர்வமான உலோகம் ஆகும். இது செழிப்பை குறிக்கும். தங்கம் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி தங்கமானது வியாழன் கோளுடன் தொடர்புடையதாகும். ஒருவேளை தங்கம் உங்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் அதனை அணியாதீர்கள், ஏனெனில் முறையாக தங்கத்தை அணியாவிட்டால் அது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
விதி 3

தங்கம் ஆற்றல் மற்றும் வெப்பத்தை கிரகித்து கொள்ளும் தன்மையுடையவை. இது விஷத்தின் வீரியத்தை குறைக்கும் சக்தி கொண்டது. உங்களுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சினை அதிகம் இருந்தால் நீங்கள் சுண்டு விரலில் மோதிரத்தை அணியவேண்டும். உங்களுக்கு புகழ் இல்லையெனில் நடுவிரலில் தங்கம் அணியுங்கள்.
விதி 4
உங்களுக்கு எந்த விஷயத்திலும் கவனம் இல்லை என்றாலும், கவனசிதறல்கள் பிரச்சினை அதிகம் இருந்தாலும் நீங்கள் ஆள்க்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும். இதன்மூலம் உங்கள் வாழ்க்கையில் அமைதி திரும்பும்.
விதி 5
திருமணம் நடப்பதில் பிரச்சினையா? கணவன் மற்றும் மனைவிக்குள் நெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலோ? கழுத்தில் செயின் அல்லது பதக்க வடிவில் தங்கத்தை அணியுங்கள். இது உங்கள் வாழ்வில் பல அதிசயங்களை உண்டாக்கும்.
விதி 6

குழந்தை செல்வம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. அது உங்கள் வாழ்க்கையில் இல்லாத போது உங்கள் மோதிர விரலில் தங்கத்தை அணியவும். இது உங்கள் வாழ்க்கையில் மழலை செல்வத்தை வழங்கும்.
விதி 7
உங்களுக்கு வயிறு தொடர்பான மற்றும் எடை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் தங்கம் அணிவதை தடுக்க வேண்டும். அதிக கோபப்படுபவர்களும் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் வியாழனின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் தங்கம் அணிவதை தவிர்க்கவும். இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களும் தங்கம் அணிவது தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி மற்றும் வயதான பெண்களும் தங்கம் அணிவதை தவிர்ப்பது நல்லது.
விதி 8
கனவில் தங்கம் மற்றும் பணம் போன்றவற்றை பார்ப்பது நல்லதல்ல. இது தோல் மற்றும் முகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படபோவதற்கான அறிகுறியாகும். ஒருவேளை உங்கள் கனவில் தங்கத்தை பார்த்தால் பல தடங்கல்களுக்கு பின்னரே பணம் கிடைக்கும். பழமையான தங்க காசுகளை கனவில் பார்த்தால் உங்களுக்கு எதிர்காலம் தொடர்பான பல பிரச்சினைகள் எழும்.
விதி 9
இடுப்புக்கு கீழே எப்போதும் தங்கம் அணியாதீர்கள். இது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் உங்கள் பணவரவை குறைக்கும். தங்கம் என்பது லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனை இடுப்பு கீழே அணிவது லட்சுமி தேவிக்கு செய்யும் அவமதிப்பாகும். இதனால் உங்கள் வாழ்க்கையில் பணரீதியான பல பிரச்சினைகள் எழும்.
விதி 10

தேவைப்பட்டால் மட்டும் இடது கையில் தங்கம் அணியுங்கள். உங்களின் நெருக்கமான சொந்தங்களுக்கு மட்டும் தங்கத்தை பரிசளியுங்கள். தங்கத்தை கொலுசாக அணிவதோ அல்லது பாதத்தில் படுவது போலவோ அணியக்கூடாது. குழந்தைகளுக்கு தங்கத்தை சிவப்பு கயிருடன் சேர்த்து இடுப்பில் அணிவித்து விடலாம்.
விதி 11
லாக்கரில் தங்கம் வைக்கும் போது எப்பொழுதும் சிவப்பு நிற துணியுடன் சேர்த்து வைக்கவும், கிழக்கு திசையை நோக்கி வைப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தங்கம் அணிந்து கொண்டு மது அருந்துவதையோ, அசைவ உணவு சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். தலைக்கு அருகில் எப்பொழுதும் தங்கத்தை வைக்காதீர்கள் இது தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும்.
விதி 12
தங்கம் அணிவது மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இது கலவையான முடிவுகளை ஏற்படுத்தும். ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது சில பிரச்சினைகளை உண்டாக்கும். துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவதை தவிர்ப்பதே அவர்களுக்கு நல்லது.- Source: manithan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
