குழந்தைகளின் பேச்சு குறைபாட்டை குணமாக்கும் பேச்சியம்மன்

0

மதுரை மாநகரம் வழியே ஓடும் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிறது பேச்சியம்மன் திருக்கோயில். இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக இருப்பது விஷேஷ அம்சம்.

இக்கோவிலில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. அத்துடன் மாலையில் குங்குமாபிஷேகம் நடக்கிறது. இதை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிகின்றனர்.

ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும். திக்குவாய் பிரச்சனை தீர, குழந்தைகளுக்கு சரிவர பேச்சு ஏற்படாத நிலை, சிறந்த பேச்சாற்றல் பெற விரும்புபவர்கள் இங்கு வந்து பேச்சியம்மனை வழிபடுவதால், அம்மனின் அருளால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்க பெறுவார்கள்.

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் சிம்மக்கல் பகுதியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply