செல்வத்தை கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத நிம்மதியை கொடுப்பது…!

0

ஆலயங்களில் இருக்கும் கோபுரம், கொடிமரம், பலிபீடம் ஒவ்வொன்றின் வழிபாடும் நமக்கு பல ஆன்மிக விஷயங்களை உணர்த்தி வருகின்றன. பலி பீடம் என்பது உயிர்களை பலியாக்குவதல்ல.. நம் மனதில் ஒளிந்திருக்கும் தீய எண்ணங்களை பலியிடும் இடமாக இருக்கிறது.

ஆலய வழிபாடும் இறைவழிபாடும் மனதுக்குள் அமைதியை உண்டாக்கும். எவ்வளவு செல்வத்தை பெற்றிருந்தாலும் இறைவனது அருள் இருந்தால் மட் டுமே மன அமைதியை பெற முடியும். ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், விஷ்ணு தலங்களிலும் உள்ள பலிபீடங்கள் சக்தி மிக்கவை. மூலவர் பீடத்துக்கு சமமான உயரத்தில் பலிபீடங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பலி பீடங்கள் தாமரை மலர் போன்று மூன்று அடுக்குகளில் அமைக்கப் பட்டிருக் கும். சில பீடங்களில் சிற்பங்கள் இருக்கும்,. சிலவற்றில் இருக்காது. பிர சித்த பெற்ற திருத்தலத்தலங்களில் பலிபீடங்களின் மீது கவசம் போடப்பட்டி ருக்கும்.மூலவருக்கு நிகரான முக்கியத்துவம் இந்த பலிபீடங்களுக்கு கொடுக் கப்படும்.

பாதுகா, ஜகதி, குமுதம், சுபோதம், அசுரபத்தி, கலாகம்பம், பத்மம் என்று பலிபீடத்தில் பலவகைகள் உண்டு. நமது முன்னோர்கள் கோயில்களில் பலிபீடம் அமைக்க காரணமே மனதை அலைக்கழிக்கும் தீய குணங்களை பலியிடு வதற்குதான். பலி பீடத்தை வணங்கிய பிறகே இறைவனை தரிசிக்க வேண்டும். கோவிலின் அமைப்பு மனித உடலின் உடலோடு ஒப்பிட்டு கூறுகிறார்கள். பலிபீடம் தொப்புளை குறிக்கிறது.

நம் கண்ணுக்கு தெரியாமல் நம் மனதில் ஆசை, காமம், வஞ்சம், மோகம், பற்று, பேராசை, உயர்வுதாழ்வு கருதும் குணம்,சினம் போன்ற எட்டு குணங்கள் நம்மை அடக்கி ஆள்கிறது இவற்றின் மீது பற்று கொண்டிருக்கும் மனிதர்கள் எவ்வளவு பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் ஆன்மிக ஞானத்தைப் பெற முடியாது. புறத்தில் தூய்மையை வைத்து, மனதில் இருக்கும் அழுக்கோடு இறைவனை வழிபட்டால் இறைவனது அருள் எப்படி கிடைக்கும்.

இறைவனை வழிபடுவதற்கு முன்பு பலிபீடத்திற்கு சென்று இந்த எட்டு குணங் களையும் பலி கொடுத்தால் மனிதன் தன்னுள் நடக்கும் மாற்றத்தை உணரும் பேரானந்தத்தை அடைவான். பலி பீடத்தில் பலியிட்டு இறைவனை வணங்கும் போது மனதில் மேலான எண்ணம் இருக்கிறது என்ற நேர்மறை எண்ணங்கள் அவனை மேலும் ஆன்மிகப்பாதைக்கு அழைத்துசெல்லும். மனதில் அளவில்லா நிம்மதியை உண்டாக்கும். அபிஷேகம் நடக்கும் போது பலிபீடத்தை வழி படக் கூடாது. பலிபீடத்தை வழிபாடு செய்யும் போது அதை தொட்டு வணங்கவும் கூடாது.

ஆலயங்களுக்கு இறைவனைக் காண செல்லும் போது உடல் தூய்மையோடு பலி பீடத்தில் மனத்தூய்மையும் செய்து மூலவரைத் தரிசியுங்கள். செல்வத்தை கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத நிம்மதியை பலிபீடம் கொடுக்கும்.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply