
எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
தேய்பிறை அஷ்டமி விரதமிருந்து வழிபாடு செய்ய காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும். ஒற்றுமை மேலோங்கும்.
இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!- Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
