வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்க கந்தனுக்கு தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற இந்த கந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். நிச்சயம் பலன் உண்டு.

வாழ்வை வளமாக்கும் கந்தன் ஸ்லோகம்
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.

– பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்

பொதுப்பொருள்:

தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply