நரசிம்மரிடம் இருந்து சங்கு சக்கரங்களை ஸ்ரீஆஞ்சநேயர் ஏன் வாங்கினார் தெரியுமா..?

0

அசுரர்களை அழிக்கவே நரசிம்மரிடம் இருந்து சங்கு சக்கரங்களை ஸ்ரீஆஞ்சநேயர் பெற்றார். அசுரர்களை அழித்த பிறகு சங்கு, சக்கரங்களை நரசிம்மரிடம் ஆஞ்சநேயர் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த சங்கு, சக்கரம் ஆஞ்சநேயரிடமே தங்கி விட்டது.

இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சோளிங்கர் ஆலய தலைமை குருக்கள் ஸ்ரீதர் பட்டாச்சார்யா விளக்கம் அளித்தார். அதாவது வைணவர்கள் ஒருவருக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தால் அவற்றை ஒரு போதும் திரும்பி வாங்க மாட்டார்கள்.

அந்த அடிப்படையில் தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு கொடுத்த சங்கு, சக்கரத்தை நரசிம்மர் திரும்ப பெறவில்லை என்று ஸ்ரீதர் பட்டாச்சார்யார் கூறினார். நான்கு கரங்களுடன் இருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் 2 கைகளில் சங்கு, சக்கரம் வைத்துள்ளார். மற்ற இருகரங்களில் ஜெபமாலையும் ஜெப சங்கையும் வைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply