சீரடி சாய்பாபாவின் மியூசியத்தில் என்னென்ன பொருட்கள் உள்ளன தெரியுமா?

0

சீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா அவதார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபா பயன்படுத்திய அனைத்து முக்கியப் பொருட்களும் அந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.

அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன தெரியுமா?

1. பாபா ஊர்வலத்தில் பயன்படுத்திய அணிவகுப்பு கொடி.

2. பாபாவின் தலையணை-மெத்தை

3. பாபாவுக்கு காற்று வீசப்பயன்படுத்திய விசிறி

4. பாபா அணிந்த வெள்ளி நிற கஃப்ணி உடை.

5. பாபாவின் செருப்பு

6. பாபாவின் புகை பிடிக்கும் மண்ணால் தயாரிக்கப்பட்ட சுக்கா.

7. அரசுக்கு ரிக்கார்டுகள்

8. இசைக்கருவி

9. பாபா பயன்படுத்திய கை

10. பாபாவின் வண்ண கப்ளி உடையும் செருப்பும்

11. பாபா கோதுமை அரைத்த திருகல்

12. பாபா தண்ணீர் ஊற்றி வைக்கும் குடுவை

13. படிகள்

14. களி மண்ணில் செய்யப்பட்ட புகை பிடிக்கும் சுக்கா 10 உள்ளது.

15. சியாம் குதிரைக்கு பயன்படுத்திய கயிறு.

16. இரும்பு வளையம்

17. விசிறி மற்றும் கடை

18. தத்தாத் ரேயர் சிலை

19. வண்ண குடை. சாவடி ஊர்வலத்தின் போது இந்த குடைதான் பக்தர் ஜோக்கால் பிடித்து வரப்பட்டது.

20. பாபா சிலை

21. பாபா அமர்ந்து குளித்த கல்

22. பாபாவுக்காக தயாரித்து வழங்கப்பட்ட ரதம். இந்தூரை சேர்ந்த பக்தர் அவஸ்தி என்பவர் இந்த ரதத்தை தயாரித்து பாபாவுக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.

23. பாபாவை தூக்கி செல்ல தயாரிக்கப்பட்ட வெள்ளி ரதம்.

24. பாபா அமர்ந்த சக்கரநாற்காலி

25. பாபா மகாசமாதி அடைவதற்கு முன்பு கடைசி மூன்று நாட்கள் எங்கும் செல்லாமல் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். பாபா மகா சமாதியானதும் அந்த கட்டிலில் தான் கிடத்தப்பட்டார். பாபாவுக்கான இறுதிச் சடங்குகள் அந்த கட்டிலில் நடைபெற்றது.

26. பாபா தம் பக்தர்களுக்காக சமைத்த சமையல் பாத்திரமான அண்ணா

27. பாபாவின் படங்கள்

28. பாபா பயன்படுத்திய பலகை. முதலில் இந்த பலகை சாவடியில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு பாதுகாப்பு கருதி அது மியூசியத்துக்கு மாற்றப்பட்டது.

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்றதுண்டு. சாவடி ஊர்வலம் நடைபெறும்போது ஆஞ்சநேயர் கோவில் எதிரில் வந்ததும் பாபா சிறிது நேரம் நின்று, கையை மேலும் கீழும் அசைத்தபடி ஏதோ மந்திரங்கள் சொல்வார். அது யாருக்கும் புரியாது.

பாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. பாபா சென்ற ஆலயம் என்பதால் பக்தர்களும் தவறாமல் சென்று வழிபடுகிறார்கள். கண்டோபா ஆலயம் இப்போது சீரடி நகருக்குள் இருக்கிறது.

ஆனால் பாபா சீரடிக்கு வந்தபோது அந்த ஊர் சாதாரணமாக இருந்தது. கண்டோபா ஆலயம் ஊர் எல்லையில் இருந்தது. அந்த ஆலய கருவறையில் சிவனின் அம்சமாக கண்டோபா உள்ளார். பாபாவுக்கு மிகவும் பிடித்த இடமாக கண்டோபா ஆலயம் திகழ்ந்தது. பாபா மீண்டும் சீரடிக்கு வந்தபோது கண்டோபா ஆலய பூசாரி மகல்சாபதி “சாய்”…. என்றழைத்தார். அன்று முதல் பாபா பெயர் சாய்பாபா ஆனது. இத்தகைய மகத்துவம் நிகழ்ந்த இடம் இது.

அதனால்தானோ என்னவோ பாபா, கண்டோபா ஆலயத்தில் நிரந்தரமாக குடியேறிவிட மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் ஆலய பூசாரியாக இருந்த மகல்சாபதியோ, பாபாவை கண்டோபா கோவில் உள்ளேயே விடவில்லை விரட்டி விட்டார்.

இதனால்தான் பாபா… சீரடி ஊருக்குள் வந்து வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். கண்டோபா ஆலயத்துக்கு பாபா வந்து சென்றதன் நினைவாக அவரது பாதுகையை அங்கு நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.

இந்த ஆலயத்தில் கண்டோபா கடவுள் சிலைதவிர மகல் சாபதியின் சிலையும் உள்ளது. மகல்சாபதியின் வாரிசை சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தை பராமரித்து பூஜித்து வருகிறார்கள். சீரடிக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக அளவில் இந்த ஆலயப் பகுதியில் தான் கட்டப்பட்டுள்ளன. எனவே சீரடி செல்லும் பக்தர்கள் மிக எளிதாக கண்டோபா ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.

இதுவரை பாபா பற்றிய தகவல்களை பார்த்தீர்கள். கடவுள் அவதாரமான பாபாவின் புகழை பரப்பியவர்களில் தமிழகத்தை சேர்ந்த நரசிம்ம சுவாமிஜி மிக முக்கியமானவர். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply