வெளிநாடு செல்லும் ரணில்.

0

COP27 காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை (5) முதல் நவம்பர் 9 ஆம் திகதி புதன்கிழமை வரை அதிபர் எகிப்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் அதிபரின் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினூக் கொலம்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் அதிபருடன் இணைந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக, இறுதி சடங்குகளுக்காக அதிபர் ரணில் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply