கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு புதிய தகவல்.

0

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5,500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனக் குடியரசின் மானியமாகப் பெறப்படும் 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் திட்டத்தின் கீழ் பேலியகொட, மொரட்டுவை, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் 2,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பின் கீழ் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றங்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply