ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்த கடும் மழை பெய்துள்ளதாகவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



