சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்?

0

கல் உப்பை பயன்படுத்துபவர்கள் அதை பீங்கான் அல்லது மண் குடுவைகளில் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இது குபேர அருளையும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கும் ஒரு அற்புதமான விஷயமாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. கல் உப்பு பயன்படுத்தும் பொழுது அதை கைகளால் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சமையலுக்கு தூள் உப்பு சேர்ப்பதாக இருந்தால், கல் உப்பை பயன்படுத்த முடியாத நிலையில் மட்டும் சேருங்கள். மற்ற எல்லா சமையலுக்கும் கல் உப்பை பயன்படுத்துங்கள். கல் உப்பை பயன்படுத்தும் பொழுது பொதுவாக டீஸ்பூன் போன்றவற்றை நாம் உபயோகிப்பது கிடையாது. கைகளைக் கொண்டு உப்பை எடுத்து போடுகிறோம். இதனால் அங்கு தரித்திரம் நீங்கி செல்வமகளின் அருள் கிடைக்கும். தன, தானியங்கள் பெருகும்.

பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இத்தகைய கல் உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறப்பு என்பதை அனைவரும் அறிவர். அது மட்டும் இல்லாமல் கல் உப்பிற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வைப்பது சுபீட்சத்தை கொடுக்கும். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் சமையல் கட்டில் கல்லுப்புக்கு அருகில் வாரம் ஒரு முறை இது போல விளக்கு ஏற்றி வைத்து பாருங்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும்.

ஒரு சிறு மஞ்சள் துணி அல்லது சிகப்பு துணியில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு கொட்டை பாக்கு வையுங்கள். வெற்றிலையுடன் வைக்கப்படும் கொட்டைப்பாக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பாக்குகளை உபயோகிக்க கூடாது. இதனுடன் கொஞ்சம் அரிசியை போட்டு வையுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்திற்கு பதிலாக நீங்கள் வெள்ளி நாணயத்தையும் போடலாம். வெள்ளி சுக்கிரனின் அம்சமாக இருக்கிறது எனவே வெள்ளி நாணயம் வீட்டில் இருப்பது சுக்ர கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சுக்கிரன் சுகபோக வாழ்க்கையை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். தன தானியங்களை பெருக்கி ஆடம்பர சுப வாழ்க்கையை கொடுக்கக்கூடிய அற்புதம் இந்த வெள்ளி நாணயத்திற்கு உண்டு. வெள்ளியால் ஆன சாவிக் கொத்து பீரோவுக்கு பயன்படுத்தினால் பணம், நகை போன்றவை சேரும். அது போல மீன் உருவம் பதித்த வெள்ளி கீ செயின்கள் பயன்படுத்துவதாலும் பணவரவு அதிகரிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. இது ஒரு முடிச்சாக கட்டி உப்பு ஜாடியில் வைத்து விட வேண்டும். இதனால் வீண் செலவுகள் குறையும், தனம் மட்டும் அல்லாமல் தானியங்களும் பெருகும்.

Leave a Reply