அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை வழமையாகப் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், வாரத்தின் ஐந்து நாட்களும் அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை அழைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இருப்பினும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்திலான கடமை தேவைகளை கருத்தில் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களும் பணிபுரிய உத்தியோகத்தர்களை அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0000000

Leave a Reply